இலங்கை புயல் நிவாரண கிரிக்கெட் போட்டி - மறுப்பு தெரிவித்த பிசிசிஐ
இலங்கை உடனான புயல் நிவாரண கிரிக்கெட் போட்டியில் விளையாட பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையை தாக்கிய திட்வா புயல்
கடந்த நவம்பர் 2025 ஆம் ஆண்டில், வங்க கடலில் உருவான திட்வா புயலால் இலங்கையில் கடுமையான பேரழிவை ஏற்படுத்தியது.

புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 390 பேர் உயிரிழந்துள்ளனர், 352 பேர் காணாமல் போயுள்ளனர்.
புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீட்டெடுக்க, இந்தியா, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் நிவாரண பொருட்களை அனுப்பியதோடு, மீட்பு பணிகளிலும் உதவியது.
பிசிசிஐ மறுப்பு
இந்நிலையில், தித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே டிசம்பர் மாதம், 2 T20 தொண்டு போட்டி நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்தது.

இந்த கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்து விட்டதாக இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய ஷம்மி சில்வா, "டிட்வா புயல் மறுசீரமைப்புக்கு உதவும் வகையில் டிசம்பர் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு போட்டிகளுக்கான சுற்றுப்பயணம் குறித்து நாங்கள் விவாதித்தோம், ஆனால் வணிக ரீதியாக சரியான நேரத்தில் ஏற்பாடுகளை இறுதி செய்ய முடியவில்லை" என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் வந்து 2 டெஸ்ட் மற்றும் 2 T20 போட்டிகளில் திட்டமிட்டபடி இந்தியா விளையாடும் என உறுதியளித்தார்.

மேலும், அடுத்த வாரம் நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான 3 T20 போட்டிகள் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதும் வெள்ள நிவாரணத்திற்கு வழங்கப்படும் என சில்வா தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |