பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர் கிடையாது: ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம்..ஐசிசிக்கு இந்தியா கடிதம்
ஐசிசி தொடர்களில் இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் என பிசிசிஐ ஐசிசிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம்
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தானுடன் விளையாடுவதில் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.
அதன்படி பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா, பஹல்காம் தாக்குதலை கண்டிப்பதாகவும், பாகிஸ்தானுடன் இருதரப்புத் தொடரில் இந்தியா விளையாடாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பின்னடைவு
மேலும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளையும் ஐசிசி தொடர்களில் ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் எனவும் ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |