ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம்: தலைவராக ஜெய்ஷா மீண்டும் தேர்வு
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர்
இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யின் செயலாளர் ஜெய் ஷா தொடர்ந்து 3வது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 31ம் திகதியான இன்று இந்தோனேசியாவின் பாலி-யில் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திரக் கூட்டத்தில் அதன் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அம்பானியின் பிரமாண்ட ஜியோ வேர்ல்ட் டிரைவ் மால்: Jaguars, Audis, BMWs உட்பட 40 சொகுசு கார்கள் பறிமுதல்
2021ம் ஆண்டு முதல் முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய்ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இடையில் அவரது பதவிக்காலம் ஜனவரி 2024 வரை நீட்டிக்கப்பட்டது.
2021ல் 32 வயதில் ஜெய்ஷா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மேல்நிலை பதவிகளுக்கு வந்த இளம் தலைவர் என்ற பெருமையை கொண்டு இருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |