வாய் திறக்க கூடாது! பேச வேணாம்... தினேஷ் கார்த்திகுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்
இந்திய அணியில் இடம்பெறுவது தொடர்பில் வாய் திறக்க கூடாது என தினேஷ் கார்த்திக்கு பிசிசிஐ உத்தரவு போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் வெகு காலத்திற்கு பிறந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் திரும்பி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
குறிப்பாக கடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் மிரட்டினார். இதனால் அயர்லாந்து தொடரிலும் இடம் கிடைத்த நிலையில் அதிலும் அதிரடி காட்டினார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி டி20 போட்டிகளின்போது தினேஷ் கார்த்திக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
haribhoomi
அடுத்து, தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இதில் முதல் போட்டியிலேயே 19 பந்துகளில் 41 ரன்களை குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
பந்தை கையில் வைத்து கொண்டு பராக்கு பார்த்த பவுலர்! ரன் அவுட்டில் இருந்து அஸ்வின் தப்பிய வீடியோ
இதனால் அக்டோபர் இறுதியில் துவங்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கின் இடம் கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய தினேஷ் கார்த்திக், தற்போது எனக்கு பிசிசிஐயிடம் இருந்து ஒரு வேண்டுகோள் வந்துள்ளது.
அதன்படி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடர் முடியும்வரை அணி விவரங்கள் குறித்து எதுவும் நான் பேசக் கூடாது. குறிப்பாக அணியில் என்னுடைய இடம் குறித்தும் நான் பேச முடியாது என தெரிவித்துள்ளார்.