வைபவ் சூர்யவன்ஷியால் கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தும் பிசிசிஐ! புதிய விதிகள் கூறுவதென்ன?
இந்திய கிரிக்கெட் வாரியம் இளம் வீரர்களுக்கு கடுமையான விதிகளை அறிமுகப்படுத்துகிறது.
வைபவ் சூர்யவன்ஷி
ஐபிஎல் 2025யில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) விளையாடினார்.
மொத்தம் 7 போட்டிகளில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி ஒரு சதம், ஒரு அரைசதத்துடன் 252 ஓட்டங்கள் குவித்தார். இதில் 24 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகள் அடங்கும்.
35 பந்துகளில் சதம் விளாசியதன் மூலம், கடந்த சீசனில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் அவரது வயது குறித்து சர்ச்சை வெடித்தது.
ரூ.1.1 கோடிக்கு வாங்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி, 14 வயதில் அறிமுகமான வீரர் என்று தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
புதிய விதி
இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷியின் மறக்கமுடியாத அறிமுகத்திற்குப் பிறகு பிசிசிஐ ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, ஐபிஎல்லுக்கு தகுதி பெற 19 வயதிற்குட்பட்ட மற்றும் 16 வயதிற்குட்பட்ட வீரர்கள் குறைந்தது ஒரு முதல் தரப் போட்டியிலாவது விளையாட வேண்டும்.
இந்த விதி 2026 சீசனுக்கு முன்னதாக செயல்படுத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இது ஐபிஎல்லில் அதிக பதின்ம வயது வீரர்களின் நுழைவை கட்டுப்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |