RCB கோப்பை வென்றால் ஓய்வு முடிவை மறுபரிசீலிக்கும் கோலி? பிசிசிஐ வலியுறுத்தல்

Virat Kohli Royal Challengers Bangalore Indian Cricket Team Board of Control for Cricket in India IPL 2025
By Karthikraja Jun 02, 2025 12:12 PM GMT
Report

 RCB கோப்பையை வென்றாலும் விராட் கோலி தொடர்ந்து ஐபிஎல் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என அருண் துமால் தெரிவித்துள்ளார்.

சூன் மாத இறுதியில், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

விராட் கோலி ஓய்வு

இந்த சூழலில், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்கள் மற்றும் பிசிசிஐயும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். 

RCB கோப்பை வென்றால் ஓய்வு முடிவை மறுபரிசீலிக்கும் கோலி? பிசிசிஐ வலியுறுத்தல் | Bcci Urge Kohli To Reconsider Retires If Rcb Win

அதற்கு சில நாட்களுக்கு முன்னதாகதான் இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவரான ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் இல்லாத, சுப்மன் கில் தலைமையிலான அணி இளம் வீரர்களை கொண்ட அணி, இங்கிலாந்திற்கு எதிரானடெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி படைத்துள்ள இமாலய சாதனைகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி படைத்துள்ள இமாலய சாதனைகள்

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, அடுத்து நடைபெற்ற அவுஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில், 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.  

RCB கோப்பை வென்றால் ஓய்வு முடிவை மறுபரிசீலிக்கும் கோலி? பிசிசிஐ வலியுறுத்தல் | Bcci Urge Kohli To Reconsider Retires If Rcb Win

இதன் காரணமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.

இந்திய டெஸ்ட் அணி இப்படி பலவீனமாக உள்ள நிலையில், விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருப்பது அவசியம் என கருதும் பிசிசிஐ, ஓய்வு முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தது. 

virat kohli re consider retirement

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அணித்தலைவராக இருந்த போது, அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய அணியின் அணித்தலைவர், அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

RCB கோப்பை வென்றால்..

இந்நிலையில் விராட் கோலியின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐயின் முன்னாள் பொருளாளரும், ஐபிஎல் சேர்மனுமான அருண் சிங் துமால், "விராட் கோலி முதல் சீசனில் இருந்ததை விட இப்போது நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். 

ipl chairman arun dhumal about virat kohli

ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகும் கோலி தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் கோப்பையை வெல்லும் RCB? ஹேசல்வுட்டிற்கும் இறுதிப்போட்டிக்கு இப்படி ஒரு ராசியா?

ஐபிஎல் கோப்பையை வெல்லும் RCB? ஹேசல்வுட்டிற்கும் இறுதிப்போட்டிக்கு இப்படி ஒரு ராசியா?

இதுவரை ஒரு முறை கோப்பை வெல்லாத அணிகளான பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள், நாளை ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது.  

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US