பிரான்ஸ் ரயில் விபத்து: சதிவேலையா? விசாரணை துவக்கம்
France derailment inquiry widens focus on rail fragment found on track: பிரான்ஸ் ரயில் விபத்தின்போது, தண்டவாளத்தில் தண்டவாளத் துண்டு ஒன்று இருந்தது தெரியவந்துள்ளதால் அது சதிவேலையா என்னும் கோணத்தில் விசாரணை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
வடக்கு பிரான்சில் பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்டதில் 44 பயணிகள் காயமடைந்துள்ளார்கள்.
பிரான்சில் தடம்புரண்ட ரயில்
வடக்கு பிரான்சிலுள்ள Rouen மற்றும் Caen நகரங்களுக்கிடையே பயணித்துக்கொண்டிருந்த ரயில் ஒன்று, வெள்ளிக்கிழமை மாலை 7.45 மணியளவில், Cleon நகருக்கு அருகே தடம்புரண்டது.

இந்த விபத்தில், அந்த ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகளில் 44 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில், 18 வயது இளம்பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் ஹெலிகொப்டர் மூலம் Rouen பல்கலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சதிவேலையா?
இதற்கிடையில், ரயில் தண்டவாளத்தில், தண்டவாளத் துண்டு ஒன்று இருந்ததே ரயில் தடம்புரளக் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து, அந்த விபத்து ஒரு சதிவேலையா என்னும் கோணத்தில் விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரான்சில் நிலத்தில் ஏற்படும் விபத்துகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் அமைப்பான BEA-TT என்னும் அமைப்பும் தனியாக ஒரு விசாரணையைத் துவக்கியுள்ளது.
எதனால் அந்த விபத்து நேரிட்டது என்பதைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் அதேபோன்றதொரு விபத்தை எப்படி தவிர்ப்பது என்பதை ஆராய்வதற்காக இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

ஆக, நீதித்துறையின் குற்றவியல் விசாரணை ஒரு பக்கம், BEA-TT அமைப்பின் தொழில்நுட்ப விசாரணை மறுபக்கம் என இரண்டு வகையான விசாரணைகள் துவக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் போக்குவரத்துத்துறை அமைச்சரான Philippe Tabarot தெரிவித்துள்ளார்.