ரூ.1.18 கோடி இழப்பீடு: கரடி வேடமிட்டு காப்பீட்டு நிறுவனத்தை ஏமாற்றிய மூவர்
கலிபோர்னியாவில் கரடி வேடமிட்டு காப்பீட்டு நிறுவனத்தை ஏமாற்ற முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கரடி வேடமிட்டு ஏமாற்ற முயற்சி
கடந்த 2024ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லேக் ஆரோஹெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் 2010(Rolls Royce Ghost) சொகுசு காருக்குள் கரடி ஒன்று புகுந்து அதன் உட்புறங்களை சிதைப்பது போன்ற வீடியோ காட்சிகள் காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்பிக்கப்பட்டு காப்பீட்டு தொகை கேட்கபட்டுள்ளது.
மேலும் அதே நாளில் அதே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மெர்சிடிஸ் கார்களும் கரடியால் சேதமடைந்ததாக கூறி $141,000 (சுமார் 1.18 கோடி ரூபாய்) இழப்பீடு கோரப்பட்டுள்ளது.
சமர்பிக்கப்பட்ட வீடியோ ஆதாரத்தில் காப்பீட்டு நிறுவனத்திற்கு சந்தேகம் எழுந்ததால், Operation Bear Claw என்ற பெயரில் விசாரணை ஒன்றை தொடங்கியுள்ளனர்.

விசாரணையில் வீடியோவை ஆய்வு செய்த வனவிலங்குத் துறை உயிரியலாளர், கரடியின் அசைவுகள் மனிதனை போல் இருப்பதாக கண்டறிந்தார், மேலும் கார்களில் இருந்த கீறல்கள் விலங்கின் நகங்களால் ஏற்பட்டது அல்ல என்பதையும் அவர் உறுதி செய்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரின் வீட்டை சோதனையிட்டதில், அவர்கள் பயன்படுத்திய முழு கரடி உடையும், செயற்கை நகங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
3 பேர் கைது
இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட ரூபன் தம்ராசியன்(26), வாஹே முராத்கன்யன்(32), அல்பியா ஜுக்கர்மன்(29) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற விசாரணையின் இறுதியில் தற்போது அவர்களுக்கு 180 நாட்கள் சிறைத்தண்டனையும் 2 ஆண்டுகள் நன்னடத்தை கண்காணிப்பும் விதிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |