கடற்கரையில் ஆனந்த குளியல் போட்ட கரடி: ஆச்சரியத்தில் மூழ்கிய பொதுமக்கள்
அமெரிக்காவில் கரடிக் குட்டி ஒன்று கடற்கரையில் ஆனந்த குளியலிட்டது அங்கிருந்த மக்களை ஆச்சரியப்படுத்தியது.
ஆனந்த குளியல்
அமெரிக்காவில் கோடை வெப்பம் சமீபமாக தீவிரமாக காணப்படுகிறது, இதனால் பொதுமக்கள் பலர் கடற்கரைகளில் குவிந்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில் புளோரிடாவில் உள்ள கடற்கரையில் கரடிக் குட்டி ஒன்று தண்ணீரில் நீந்தி ஆனந்த குளியலிட்டது அங்கிருந்த மக்களை ஆச்சரியப்படுத்தியது.
Bruh why tf is there a bear at the beach in Florida ? pic.twitter.com/dYjPDAE9NR
— Shannonnn sharpes Burner (PARODY Account) (@shannonsharpeee) June 11, 2023
தப்பியோடிய கரடி
பொதுமக்களை கண்டதும் தண்ணீரில் உற்சாகமாக விளையாடிய கரடி, தண்ணீரில் இருந்து வெளியேறி மணல் திட்டுகள் வழியாக ஓடி அங்கிருந்த புதருக்குள் மறைந்தது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறிய தகவலில், இப்பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாகவும்,கோடை வெப்பத்தை தணித்து கொள்வதற்காக சில சமயம் கரடிகள் இவ்வாறு நீரில் நீந்தி விளையாடுகின்றன என தெரிவித்துள்ளார்.