சர்ச்சையில் சிக்கிய இளவரசரின் பிள்ளைகள்: இலவச மாளிகைகளில் வசிப்பதாக வெளியாகியுள்ள தகவல்
சர்ச்சையில் சிக்கி பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டுவந்த இளவரசர் ஆண்ட்ரூவின் பிள்ளைகள், வாடகை செலுத்தாமல் இலவசமாக மாளிகைகளில் வசிப்பதாக வெளியாகியுள்ள தகவல் பொதுமக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
இலவச மாளிகைகளில் வசிக்கும் இளவரசிகள்
இளவரசர் ஆண்ட்ரூவின் பிள்ளைகளான இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும், தாங்கள் வாழும் மாளிகைகளுக்கு ஒரு பைசா கூட வாடகை செலுத்துவதில்லையாம்.

அத்துடன், அவர்களுக்கு தனியாக வீடுகள் இருக்கும் நிலையிலும், மக்கள் வரிப்பணத்தில் இலவசமாக மாளிகைகளில் குடியிருக்கிறார்களாம்.
அதாவது, அவர்களுடைய வீடுகளுக்கான வாடகையை மன்னர் சார்லஸ் செலுத்துகிறாராம்.
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியாருடன் சார்லஸ் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தின்படி, இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும் வாழும் வீடுகளுக்கான வாடகையை மன்னர் செலுத்துகிறாராம்.
ராஜ குடும்பத்தில் பணி எதுவும் செய்யாமலிருந்தும், அவர்களுக்கென தனி வீடுகள் இருந்தும் இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும் வாடகை செலுத்தாமல் மக்கள் பணத்தில் மாளிகைகளில் வசிப்பதாக வெளியாகியுள்ள தகவல் மக்களை கோபமடையச் செய்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |