பிரபலங்களின் பார்ட்டியில் கலந்துகொண்ட அழகிய இளம்பெண்: எடுத்த மோசமான முடிவு
இளவரசர் ஆண்ட்ரூ, பில் கிளிண்டன் முதலான பிரபலங்கள் கலந்துகொள்ளும் பார்ட்டியில் கலந்துகொண்ட அழகிய இளம்பெண் ஒருவர், பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பிரபலங்களின் பார்ட்டியில் கலந்துகொண்ட அழகிய இளம்பெண்
சிறுமிகளையும், இளம்பெண்களையும் சீரழித்து விருந்தினர்களுக்கு இரையாக்கிவந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். அவரது காதலி கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல். அப்படி எப்ஸ்டீனுடைய மாளிகையில் விருந்துக்குச் சென்றவர்களில் ஒருவர், இளவரசர் ஆண்ட்ரூ.
இந்நிலையில், தன்னை ஜெஃப்ரி எப்ஸ்டீனுடைய பாலியல் அடிமையாக்கிய அவரது காதலி கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல் மீது விர்ஜினியா தொடுத்த வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை வெளியிட, நீதிபதியான Loretta Preska என்பவர் அனுமதியளித்துள்ளார்.
Credit: AP:Associated Press
அவ்வகையில், அந்த வழக்கில் தொடர்புடைய, அல்லது ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள சில பெயர்கள் அதிர்ச்சியை அளிப்பவையாக உள்ளன. அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், நடிகைகள் கேட் ப்ளாஞ்சட், கேமரான் டயஸ், மொடலான நவோமி கேம்பல், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் பில் கிளிண்டன், டொனால்ட் ட்ரம்ப்,
Credit: Getty
டைட்டானிக் புகழ் நடிகர் லியனார்டோ டிகேப்ரியோ, பாப் பிரபலமான மைக்கேல் ஜாக்சன், நடிகர்கள் கெவின் ஸ்பேசி, புரூஸ் வில்லிஸ் மற்றும் இளவரசர் ஆண்ட்ரூ ஆகிய பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அதே பட்டியலில் இடம்பெறுள்ள ஒரு பெயர், ருஸ்லானா (Ruslana Korshunova). ருஸ்லானா, ஒரு அழகிய மொடல் ஆவார்.
மொடல் எடுத்த மோசமான முடிவு
ரஷ்யப் பெண்ணான ருஸ்லானா, 2008ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 28ஆம் திகதி, நியூயார்க்கிலுள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் வெளியே, சாலையில் இறந்து கிடந்தார். அப்போது அவருக்கு 20 வயது.
Credit: Reuters
அவர் ஒன்பது மாடிகள் கொண்ட தனது அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
தற்போது, ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய நபர்களின் பெயர்ப் பட்டியலில் ருஸ்லானாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
அவர், எப்ஸ்டீன் விருந்துகள் நடத்தும் தீவுக்குச் சென்றுள்ளது உற்தி செய்யப்பட்டுள்ளது. எப்ஸ்டீனை சந்தோஷப்படுத்துவதற்காக அழகிய இளம்பெண்களை அவரது காதலியான கிஸ்லெய்ன் அந்த தீவுக்கு அழைத்துவருவதுண்டு.
Credit: The Mega Agency
அவரிடம் ருஸ்லானா எப்படி சிக்கினார் தெரியவில்லை. தற்கொலை செய்துகொள்வதற்கு மூன்று மாதங்கள் முன் மனம் வருந்தி சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டு வந்தார் ருஸ்லானா. அவற்றில் ஒன்றில், நான் என்னையே இழந்துவிட்டேன், என்னை நான் மீண்டும் கண்டுபிடிப்பேனா தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
ஒரு மொடலாக உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் நேரத்தில், எதனால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது மர்மமாகவே நீடிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |