நீங்கள் கொல்லுங்கள்... நாங்கள் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறோம்: ரஷ்யப் படையினரை உற்சாகப்படுத்தும் அழகிய இளம்பெண்கள்
உக்ரைனை ஊடுருவி அராஜகச் செயல்களில் ஈடுபடும் ரஷ்யப் படையினரை உற்சாகப்படுத்துவதற்காக, அவர்களை இனிப்புகளுடன் சென்று சந்தித்துள்ளார்கள் ரஷ்ய அழகிகள் சிலர்.
அவர்கள் செயலைப் பார்த்தால், நீங்கள் கொல்லுங்கள்... நாங்கள் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறோம் என ரஷ்யப் படையினரை உற்சாகப்படுத்துவது போல் இருக்கிறது.
அவர்கள் சொன்னாலும் சொல்வார்கள்... ஏற்கனவே ஒரு ரஷ்யப் படைவீரரின் மனைவி, நீங்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் நாசம் செய்யுங்கள். ஆனால், அதைக் குறித்து என்னிடம் மட்டும் சொல்லவேண்டாம் என தன் கணவனை உற்சாகப்படுத்திய சம்பவம் நினைவிருக்கலாம்.
ஆக, இவ்வளவு கொலை, துஷ்பிரயோகங்களுக்குப் பிறகும் கொஞ்சமும் மனமிரங்காத ரஷ்யர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது இந்தப் பெண்களைப் பார்க்கும்போது தெளிவாகப் புரிகிறது.
ரஷ்யாவிலும் போரை எதிர்க்கும் சிலர் இருக்கும் நிலையில், குறிப்பாக இளைஞர்களை, போர் என்பது அவசியமான ஒன்று என்பதை ஒப்புக்கொள்ளச் செய்யும் வகையில் பாடல்கள் பாடி, அவர்களை மனம் மாற்ற முயன்றார்களாம் இதே பெண்கள்.
அந்த இளம்பெண்களில் ஒருவரான Alyona Boyko, ஒரு சமூக ஊடகப் பிரபலம். அவர் ரஷ்யப் படையினருக்கு தெரிவித்துள்ள செய்தி என்னவென்றால், என்ன தடைகள் வந்தாலும் எதிர்த்து நில்லுங்கள், விட்டுக்கொடுக்காதீர்கள், கடினமான நேரங்கள் கடந்து போகும், எல்லாம் சரியாகிவிடும் என்பதாகும்.
ஆக, ஏதோ தன் நாட்டை எதிரியிடம் இருந்து மீட்பதற்காக போருக்குச் செல்லும் வீரனை உற்சாகப்படுத்தும் தாயின் வார்த்தைகள் போல இருக்கும் இந்த வார்த்தைகளை, அநியாயமாக ஒரு நாட்டுக்குள் ஊடுருவி அங்கிருக்கும் பொதுமக்களைக் கொன்று, அவர்களது பெண்களை சீரழிக்கச் சென்றிருக்கும் கொடூரர்களைப் பார்த்துச் சொல்வது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.