சரும அழகை மேம்படுத்த இந்த ஒரு டீ போதும்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்
செம்பருத்தி இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, சோர்வை நீக்கவும், சரும பளபளப்பிற்கும் உதவுகிறது.
இந்த செம்பருத்தி பூவை பயன்படுத்தி தேநீர் போட்டு குடிப்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் வந்தடைகின்றன.
ஆரோக்கியம் நிறைந்த செம்பருத்தி பூ டீயை குடிப்பதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும், இதனை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- காய்ந்த செம்பருத்தி பூ- 5
- தண்ணீர்- 1 கப்
- தேன் அல்லது நாட்டு சர்க்கரை- 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின் அதில் காய்ந்த செம்பருத்தி பூக்களை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
பின் இதனை வடிகட்டி அதில் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து குடிக்கலாம்.
இந்த டீயை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை தாராளமாக குடிக்கலாம்.
கிடைக்கும் பலன்கள்
செம்பருத்தி டீ, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயம் சுருங்கி விரிவதற்கு வலிமையைத் தருகிறது. மேலும் இது சருமத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் இருக்க உதவுகின்றன.
சூடான இந்த டீயை காலை உணவிற்கு முன்பாக வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன்கள் வந்தடையும்.
செம்பருத்தி டீயில் தேன் கலந்து குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் இது கருப்பை கட்டிகளை கரைக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.
செம்பருத்தி டீயில் நோய்யெதிர்ப்பு சக்தி அதிகளவில் உள்ளதால் காய்ச்சல் மற்றும் சளியால் அவதிப்பட்டு வருபவர்கள் ஒரு நாளைக்கு 2- 3 முறை குடிக்கலாம்.
கர்ப்ப காலங்களில் செம்பருத்தி டீயை குடிப்பதால் ஹார்மோன்கள் சமசீராக இருக்கும்.மேலும் மாதவிடாய் வலிகளை போக்க இந்த டீ உதவுகிறது.
கர்ப்பப்பை கட்டிகள் உள்ள பெண்கள் மருத்துவரின் ஆலோசனை படி இந்த செம்பருத்தி டீயை எடுத்துகொல்வதால் விரைவில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |