வயதானாலும் சருமத்தில் சுருக்கம் வராமல் தடுக்க இதை மட்டும் செய்தாலே போதும்
வயதானால் முகத்தில் சுருக்கம் விழுவது இயல்பான ஒன்று. சில பேருக்கும் இந்த சுருக்கம் விழுவதில்லை அதற்கு காரணம் தங்களது வாழ்வியல் முறைகளை ஹெல்தியாக வைத்துக்கொள்வது தான்.
சுருக்கும் விழுவதற்கு அதிகமாக வெயிலில் சுற்றுவது, சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது பாேன்ற பல காரணங்கள் உள்ளது.
சுருக்கம் வராமல் தடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 6 வழிகள் பற்றி விரிவாக காணலாம்.
1. சிகரெட் பழக்கம்
புகைபிடிக்கும் பழக்கத்தினால் முகத்தில் விரைவிலேயே சுருக்கம் போன்ற பிரச்சனைகள் வர வழிவகுக்கிறது.
சிகரெட் பழக்கம் இருப்பது மனதையும், உடலையும் பாதிக்கும். எனவே இந்த பழக்கத்தை நிருத்திவிடுவது நல்லது.
2. டயட் முறை
ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளை உணவு டயட்டில் சேர்த்துக்கொள்வது நல்லது. இது, உங்களின் சருமத்திற்கு தேவையான சத்துக்களை தருகின்றன.
அந்தவகையில், பெர்ரி பழ வகைகள், பீன்ஸ், ஆப்பிள், ஒமேகா 3 வகை உணவுகள் ஆகியவை ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்தவையாக இருக்கும்.
3. நீர்ச்சத்து
ஒரு நாளைக்கு நாம் 3.7 லிட்டர் தண்ணீரில் இருந்து 2.7 லிட்டர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சரியாக தண்ணீர் குடிப்பது இல்லை என்றால் கண்டிப்பாக இளம்வயதிலேயே முகத்தில் சுருக்கம் விழும் பாதிப்பது ஏற்படும்.
தண்ணீருக்கு பதிலாக தேங்காய் தண்ணீர், இளநீர் அல்லது எலுமிச்சை தண்ணீர் கூட குடிக்கலாம்.
4. கிரீம்கள்
சருமத்திற்கேற்ற, கெடுதல் விளைவிக்காத கிரீம்களையும், அழகுசாதனப் பொருட்களை உபயோகிக்கவும்.
சரும சுருக்கத்தை வராமல் தடுக்க நம்பகரமான பிராண்டுகளை மட்டும் செலக்ட் செய்யவும்.
5. வெயிலில் சரும பாதிப்புகள்
வெளியில் சருமத்தை காட்டினாள் சுருக்கம் வர வாய்ப்புகள் அதிகம். வெளியில் செல்வதற்கு முன்னர் கண்டிப்பாக சன்ஸ்க்ரீன் லோஷன் தடவிக்கொள்ள வேண்டும்.
கண்களில் கூலிங் கிளாஸ், முடிந்தால் தொப்பி அல்லது துப்பட்டா, முழு நீள கை வைத்த சட்டை ஆகியவற்றை அணிய வேண்டும். முடிந்தவரை சருமத்தை வெயிலில் காண்பிக்காதீர்கள்.
6. சரியான தூக்கம்
ஒரு மனிதர் சராசரியாக 7- 8 மணிநேரம் கண்டிப்பாக தூங்கவேண்டும். தூங்கும்பொழுது உடலுக்கு தானாக டெட் சரும செல்களை சரி செய்து கொள்ள உதவும்.
சரியான தூக்கம் இல்லை என்றால் முகத்தில் சுருக்கம் விழலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |