அழகு மீதான மோகம்: பிரித்தானியாவிற்குள் 100,000 பவுண்டுகள் மதிப்புள்ள கஞ்சா..பிடிபட்ட பெண்
தாய்லாந்தில் இருந்து பிரித்தானியாவிற்குள், ஒரு லட்சம் பவுண்டுகள் மதிப்புள்ள போதைப்பொருளை கொண்டுவந்த பெண் கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்திற்கு சுற்றுப்பயணம்
நிக்கோல் ஹட்சின்சன் என்ற 25 வயது பெண்ணும், கியா அண்டர்வுட் (28) என்ற நபரும் தாய்லாந்திற்கு 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

அதன் பின்னர் அவர்கள் பிரித்தானியாவின் மான்செஸ்டர் விமான நிலையத்தில் இரண்டு சூட்கேஸ்களுடன் திரும்பினர்.
அவற்றை சோதனை செய்தபோது அதனுள் 48.75 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு 100,000 பவுண்டுகள் என்று மதிப்பிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட, மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. அப்போது ஹட்சின்சன் போதைப்பொருள் கடத்தல் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
10,000 பவுண்டுகள் கடனில்
ஆனால், அண்டர்வுட் மற்றும் பெயரிடப்படாத மற்றொரு நபரின் வழிகாட்டுதலின் பேரிலேயே தான் செயல்பட்டதாக கூறி, தனக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்குமாறு கோரினார்.
மேலும், தனது மின்சாரம் மற்றும் Wifi கட்டணங்களுக்காக 10,000 பவுண்டுகள் கடனில் இருந்ததால் இதனை செய்ததாகவும் கூறினார்.
ஆனால், அவருக்கு மோசமான நிதி நிலைமை இருந்தபோதிலும், அவர் தன் தோற்றம் குறித்து அதீத கவனம் கொண்டவராக இருந்ததால், உதடுகளை மேம்படுத்துதல், கண் இமை நீட்டிப்புகள் மற்றும் பல்வேறு முடி சாயமிடுதல் போன்ற அழகு சிகிச்சைகளுக்காக பெருமளவில் செலவழித்ததாக தெரிகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |