முகத்தை அழகுடனும், இளமையுடனும் வைத்திருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்!
health
Beauty
facial
tips
By Balakumar
பொதுவாக முகம் பார்க்க அதிக அழகுடன் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும்.
இதற்கு என்னதான் பணம் செலவழித்து கிறீம்களை வாங்கி போட்டாலும் ஒரு சிலருக்கு முகத்தின் பொலிவை மீண்டும் கொண்டு வர இயலாது.
அந்தவகையில் என்றென்றும் இளமையுடனும், அழகுடனும் இருக்க ஆசைப்படும் பெண்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றை செய்தாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- பசும்பால், பாசிப் பயறு மாவு, குப்பைமேனி இலைச்சாறு, கஸ்மதூரி ஞ்சள் கலந்து முகத்தில் தடவுவதால் முகச்சுருக்கம் சரியாகும். முகம் பொலிவு பெறும்.
- பாசிபயறு மாவு, வெள்ளரிக்காய் சாறு கலந்த மேற்பூச்சாக பயன்படுத்துவதால் வேர்க்குரு கொப்புளங்கள் சரியாகும். முல்தானிமெட்டி பவுடர், பன்னீர் அல்லது வெள்ளரிக்காய் சாறு கலந்து தடவுவதால் வேர்க்குரு, கொப்புளங்கள் கட்டிகள் சரியாகும்.
- வறண்ட சருமம் சரியாக, தேன், பாலுடன் குங்குமப்பூ சிறிது கலந்து முகம் உடலில் தடவி குளிப்பதால் முகம் பளபளக்கும். எண்ணெய் வழியும் சருமத்திற்கு பாலில் குங்குமப்பூ கலந்து தடவி குளிப்பதால் சரியாகும்.
- எண்ணெய் முகம் உள்ளவர்கள் தக்காளி ஜூஸை தொடர்ந்து தடவி வரலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ, பி, சி மூன்றும் சருமத்தை இளமையாக வைத்திருக்கும்.
- சருமத்தை சுத்தமாக்குவதில் பால் சார்ந்த பொருட்கள் மிகச் சிறப் பாகச் செயல்படுகின்றன. தயிர், வெண் ணெய் போன்றவற் றையும், சாதம் வடித்த கஞ்சியுடன் பாலையும் சேர்த்து முகத்தில் தடவினால் தளர்ந்த சருமம் இறுக்க மாகும்.
- பாதாம் பருப்பு விழுதை வாரம் ஒருமுறை முகத்தில் அப்ளை செய்து வந்தால், சொர சொரப்பான சருமம் மிருதுவாகும். இந்த பேக் முகத்தில் உள்ள ஈரப்பசையை தக்கவைக்கும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US