Tampon காரணமாக இரு கால்களையும் இழந்த பெண்... மரணத்தை நெருங்கி மீண்டதாக உருக்கம்
அமெரிக்காவில் மொடல் ஒருவர் மாதவிடாய் நேரத்தில் பயன்படுத்தும் Tampon காரணமாக மரணத்தை நெருங்கி மீண்டதாக தமது கதையை பகிர்ந்துகொண்டுள்ளார்.
Tampon பயன்பாடு காரணமாக
கலிபோர்னியாவின் சான்றா மோனிகா பகுதியை சேர்ந்தவர் 35 வயதான Lauren Wasser. இவரே Tampon பயன்பாடு காரணமாக தமது இரு கால்களையும் இழந்தவர்.
வெறும் காய்ச்சல் அறிகுறிகளுடன் காணப்பட்டவர், பின்னர் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு, உயிர் காக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, இறுதியில் இரு கால்களையும் இழக்க நேர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மொடல் தொழிலை முன்னெடுத்துவரும் அவர், Tampon தொடர்புடைய அபாயங்கள் குறித்து பெண்கள் மற்றும் இளம் வயதினருக்கு எச்சரிக்க விடுத்து வருகிறார்.
அத்துடன் பெண்களுக்கான சுகாதாரப் பொருட்களில் வெளிப்படைத்தன்மைக்கான கோரும் சட்டத்தையும் ஊக்குவித்து வருகிறார். 2012ல் 24 வயதான Lauren Wasser பல்கலைக்கழக படிப்புக்கான வாய்ப்பை வெறும் காய்ச்சல் அறிகுறிகள் தலைகீழாக மாற்றியது.
மரணத்திற்கு மிக அருகாமையில்
அவரது தாயார் பொலிசாருக்கு தகவல் தெரிவித்து, தமது மகளின் குடியிருப்பில் சென்று விசாரிக்க கோரிய நிலையில், மரணத்திற்கு மிக அருகாமையில், தமது படுக்கை அறையில் நினைவற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.
@YouTube
மனித கழிவுகள் மற்றும் வாந்தியால் அந்த அறை அருவருப்பான நிலையில் காணப்பட்டது. இதனையடுத்து, பொலிசாரின் உதவியுடன் அவர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
காய்ச்சல் அவருக்கு அப்போது 107 டிகிரி தொட்டது. அத்துடன் மாரடைப்பும் ஏற்பட, அவரது உள் உறுப்புகள் செயல்பாட்டை இழந்தது. இந்த நிலையில் தான் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில், Tampon பயன்பாடு காரணமாக தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
TSS பாதிப்பு உறுதி
TSS எனப்படும் மிக அரிதான உயிரைப்பறிக்கும் தொற்று. மருத்துவர்கள் போராடி அவர் உயிரை காப்பாற்றினர். ஆனால் கால்கள் இரண்டையும் அவர் இழக்க நேர்ந்தது. அதன் பின்னர் TSS குறித்து பெண்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவிட்டு வருகிறார்.
@getty
Tampon பயன்படுத்தும் பெண்களுக்கு இந்த பாதிப்பு காணப்படுவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 100,000 பெண்களில் ஒருவருக்கு TSS பாதிப்பு உறுதி செய்யப்படுவதாகவும் கூறுகின்றனர். 8 மணி நேரத்திற்கும் அதிகமாக ஒரு Tampon பயன்படுத்துவது ஆபத்தில் முடியும் என்றே எச்சரிக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |