லண்டனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு! பொலிசார் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
மேற்கு லண்டனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், முதற்கட்ட ஆய்வுக்கு பின்னர் கொலை வழக்காக விசாரிக்க பொலிசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மரண காரணம் முக்கிய தகவல்
ஜூன் 16ம் திகதி வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் பெட்ஃபோன்டில் ஸ்டெயின்ஸ் சாலையில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து 35 வயது Monika Wlodarczyk, இவரது கணவர் 39 வயது Michal Wlodarczyk, இவர்களின் பிள்ளைகள் Maja(11), மற்றும் Dawid(3) ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போது மோனிகா மற்றும் அவரது கணவரின் மரண காரணம் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளனர். உடற்கூறு ஆய்வில், கூரான ஆயுதம் ஒன்றால் மோனிகா தாக்கப்பட்டுள்ளது, அதன் காரணமாகவே அவர் மரணமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மோனிகாவின் கணவர் மைக்கேல் கூரான ஆயுதத்தால் கழுத்தில் தாக்கப்பட்டு இறந்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் மரணத்தின் போது என்ன நடந்தது என்பது தொடர்பிலான தகவல்களை தற்போது வெளியிட வாய்ப்பில்லை என்றே பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஒரு மகிழ்ச்சியான குடும்பம்
மட்டுமின்றி, இது ஒரு கொலை வழக்காக இருக்கலாம் என்ற போதிலும், தற்போதைய சூழலில் கொலை வழக்காக பதிவு செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். பிள்ளைகள் இருவரின் உடற்கூறு ஆய்வுகளும் ஜூன் 21ம் திகதி முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கையில், அது ஒரு மகிழ்ச்சியான குடும்பம். அவர்களுக்கு இப்படியான ஒரு சூழல் ஏற்பட்டிருப்பது நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
விசாரணை அதிகாரி Linda Bradley தெரிவிக்கையில், நால்வர் மரணத்தில் எவருக்கேனும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் இதுவரை விசாரிக்க துவங்கவில்லை. இருப்பினும், பொதுமக்களின் பங்களிப்பு இந்த வழக்கிலும் தங்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |