லண்டனில் உயிரிழந்த கிடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்: விடயங்களை வெளியிட்ட பொலிஸார்
பிரித்தானியாவின் மேற்கு லண்டனில் உள்ள குடியிருப்பில் உயிரிழந்து கிடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரின் பெயர்களையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மரணம்
மேற்கு லண்டன் பகுதியின் ஹவுன்ஸ்லோ-வில்(Hounslow) உள்ள குடியிருப்பு ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை மதியம் 3:12 மணியளவில் சந்தேகத்தின் பேரில் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட பொலிஸார், அங்கிருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கதவினை உடைத்து கொண்டு சென்று சோதனை செய்தனர்.
Sky News
அப்போது வீட்டுக்குள் 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அவர்களுடன் இரண்டு சிறுவர்களும் உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, பொலிஸார் முதல் கட்ட விசாரணையை தொடங்கி உயிரிழந்தவர்களின் அடையாளங்களை கண்டறிய முற்பட்டனர்.
பெயர் விவரங்களை வெளியிட்ட பொலிஸார்
இந்நிலையில் ஹவுன்ஸ்லோ-வின் பெட்ஃபாண்ட்(Bedfont) பகுதியில் உள்ள குடியிருப்பில் உயிரிழந்து கிடந்த நால்வரின் பெயர் விவரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
Sky News
அவற்றின் முறையே உயிரிழந்தது 39 வயது மைக்கல் வ்லோடார்சிக்(Michal Wlodarczyk), 35 வயது மோனிகா வ்லோடார்சிக்(Monika Wlodarczyk) 11 வயது மஜா வ்லோடார்சிக்(Maja Wlodarczyk) மற்றும் 3 வயது டேவிட் வ்லோடார்சிக்(Dawid Wlodarczyk) என அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்த இரண்டு குழந்தைகளுக்கும் உயிரிழ்ந்த வ்லோடார்சிக் தம்பதியின் குழந்தைகள் என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் உயிரிழப்பு சம்பவம் நடைபெற்ற சூழலை ஆராய்ந்து வருவதாகவும், ஆனால் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் என்று யாரையும் காவல்துறை தேடவில்லை என்று பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
Sky News
எப்படி இருப்பினும் சிறப்பு உடற்கூறு ஆய்வு சிகிச்சைகள் உரிய நேரத்தில் நடைபெறும் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |