நண்பனைக் காப்பாற்ற தாக்குதல்தாரியுடன் போராடிய இந்திய வம்சாவளி இளம்பெண்: புதிய தகவல்
பிரித்தானியாவின் நாட்டிங்ஹாமில் மாணவர்கள் இருவர் கத்தியால் குதிக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கத்தியால் தாக்கிய நபர்
செவ்வாய்க்கிழமையன்று, மர்ம நபர் ஒருவர் நாட்டிங்ஹாம் பல்கலை மாணவர்களான கிரேஸ் (Grace O’Malley-Kumar, 19) மற்றும் பர்னபி (Barnaby Webber, 19) ஆகியோரைக் கத்தியால் குத்திக் கொன்றார்.
அதைத் தொடர்ந்து Ian Coates (65) என்பவரைக் கொலை செய்த அந்த நபர், அவரது வேனை திருடிச் சென்று பாதசாரிகள் மீது மோதினார்.
PA
கைது செய்யச் சென்ற பொலிசாரை நோக்கி கத்தியுடன் ஓடிவந்த அவரை பொலிசார் டேசர் மூலம் தாக்கிப் பிடித்துள்ளார்கள். அவரது பெயர் Valdo Calocane (31) என தெரியவந்துள்ளது. அவரும் நாட்டிங்ஹாம் பல்கலை முன்னாள் மாணவர் என்றும், படிக்கும்போது அவர் பிரகாசமான மாணவர் என்றும் அவரைக் குறித்துக் கூறப்படுகிறது.
புதிய தகவல்கள்
இந்நிலையில், சம்பவத்தைக் கண்ணால் கண்ட ஒருவர், பர்னபி தாக்கப்பட்டபின் கிரேஸ் அவரைக் காப்பாற்ற முயன்றதைக் கண்டதாக தெரிவித்துள்ளார்.
பர்னபியும் கிரேஸும் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, Valdo பின்னாலிருந்து பர்னபியைக் கத்தியால் குத்தியதாக தெரிவித்த அந்த நபர், கிரேஸ் நினைத்திருந்தால், தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அங்கிருந்து ஓடியிருக்கலாம்.
Nottinghamshire Police
ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை, அவர் Valdoவிடமிருந்த பர்னபியைக் காப்பாற்ற முயன்றார் என்று கூறியுள்ளார் சம்பவத்தைக் கண்ணால் கண்ட அந்த நபர்.
அதற்குப் பிறகுதான் கிரேஸ் தாக்கப்பட்டுள்ளார். அவர் உயிருடன் இருந்திருந்தால் மருத்துவராகி பல உயிர்களைக் காப்பாற்றியிருப்பார். காரணம், அவர் மருத்துவப் படிப்புதான் படித்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், பிரகாசமான மாணவன் என கூறப்படும் Valdo எதற்காக இப்படி மூன்று பேரைக் கொலை செய்தார் என்பது இன்னமும் தெரியவரவில்லை. பொலிசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Ian Whittaker
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |