நாட்டிங்ஹாம் தாக்குதல் சம்பவம்: கொடூர குற்றவாளி மீது பதியப்பட்டுள்ள வழக்குகள்
நாட்டிங்ஹாம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 31 வயது வால்டோ கலோக்கேன் மீது மூன்று கொலை வழக்குகள் சுமத்தப்பட்டு இருப்பதாக நாட்டிங்ஹாம்ஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவை உலுக்கிய நாட்டிங்ஹாம் சம்பவம்
பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 19 வயது இளம்பெண் கிரேஸ் குமார் மற்றும் அவரது பார்னபி வெபர் ஆகிய இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் இந்த கொலை சம்பவத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக 54 வயதுடைய முதியவர் ஒருவரும் அதே குற்றவாளியால் கத்தியால் குத்தப்பட்ட இறந்துள்ளார்.
Sky News
அத்துடன் கொல்லப்பட்ட முதியவரின் வேனையும் திருடிய குற்றவாளி, பாதசாரிகள் மூன்று பேர் மீது வேனை இடிக்க செய்து காயமடைய வைத்துள்ளார்.
கொலை குற்ற வழக்குகள் பதிவு
இந்நிலையில் நாட்டிங்ஹாம் சம்பவத்தில் சந்தேக நபர் என பிடிக்கப்பட்ட 31 வயது வால்டோ கலோக்கேன்(Valdo Calocane) மீது மூன்று கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக நாட்டிங்ஹாம்ஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 3 பேரை கொலை செய்ய முயற்சித்த குற்றமும் சுமத்தப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
The Sun
இதையடுத்து குற்றம் சுமத்தப்பட்டுள்ள 31 வயது நபர் வால்டோ கலோக்கேன், நாட்டிங்ஹாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Sky news