பிரித்தானியாவை உலுக்கிய நாட்டிங்ஹாம் சம்பவம்: வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற குற்றவாளியின் சிசிடிவி காட்சிகள்
பிரித்தானியாவை உலுக்கிய நாட்டிங்ஹாம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர், முன்னதாக வீடு ஒன்றை உடைத்து கொண்டு உட்புகு முயற்சித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை உலுக்கிய நாட்டிங்ஹாம் சம்பவம்
பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கத்திக்குத்து சம்பவத்தில் 19 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த கிரேஸ் குமார் என்ற இளம் பெண்ணும் அவரது நண்பர் பார்னபி வெபர் என்ற நபரும் உயிரிழந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக குற்றவாளி 54 வயதான நபர் ஒருவரை கொன்று விட்டு அவரது வாகனத்தை திருடிச் சென்றுள்ளார். அத்துடன் திருடப்பட்ட வாகனத்தை கொண்டு பாதசாரிகள் மூவர் மீது மோதியுள்ளார்.
இதில் பாதசாரி ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்காக மருத்துவமனையில் போராடி வருகிறார், மேலும் இருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
மூன்று பேரை கொன்றதாக நம்பப்படும் 31 வயது குற்றவாளியை பொலிஸார் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர், அத்துடன் அவர் மனநல பாதிப்புகளால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என தகவல் தெரிவித்துள்ளனர்.
So this is the sick individual who decided that three innocent people didn’t deserve to live he is a coward and a man who we shouldn’t have let into the country to Kill Barnaby Webber Grace Kumar and Ian Coates we need to defend our borders #Nottingham #nottinghamattack pic.twitter.com/VscvOlChoJ
— Lee Hood (@Mofoman360) June 14, 2023
வீட்டிற்குள் நுழைய முயற்சித்த குற்றவாளி
இந்த அனைத்து சம்பவங்களுக்கும் முன்னதாக நாட்டிங்ஹாம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி என நம்பப்படும் நபர் மேப்பர்லி சாலையில் உள்ள சொத்தில் ஒன்றில் அத்துமீறி நுழைய முயற்சித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சீலி ஹிர்ஸ்ட் ஹவுஸ் குடியிருப்பில்(Seely Hirst House residential) உள்ள வீடு ஒன்றில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் உள்நுழைய முயற்சிக்கும் காட்சிகள் அந்த சிசிடிவி காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இதனை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் வழங்கிய தகவலில், அதிகாலை 4மணிக்கு பிறகு குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் மேப்பர்லி சாலையில்(Mapperley Road) உள்ள வீட்டின் மீது ஏறி திறந்த ஜன்னல் வழியாக உள் நுழைய முயற்சித்தார், ஆனால் வீட்டின் உரிமையாளர் விழித்து கொண்டதுடன், வீட்டிற்கு ஏற முயற்சித்த நபரை தாக்கி தரையில் விழச் செய்தார்.
மீண்டும் வேறு வழியை தேடிய அந்த நபர் பின், தன்னுடைய கருப்பு பையை எடுத்துக் கொண்டு மக்தலா சாலையயை ( Magdala Roa) நோக்கி சென்று விட்டார் என தெரிவித்துள்ளார்.