இந்திய வம்சாவளி இளம்பெண்ணையும் நண்பரையும் கொன்றவர் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்
பிரித்தானியாவின் நாட்டிங்ஹாமில் இந்திய வம்சாவளி இளம்பெண் உட்பட மூவரைக் கொலை செய்த நபர் குறித்த அதிர்ச்சியை உருவாக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஒன்றரை மணி நேரமாக களேபரம்
செவ்வாய்க்கிழமையன்று, மர்ம நபர் ஒருவர் நாட்டிங்ஹாம் பல்கலை மாணவர்களான Grace O’Malley-Kumar (19) மற்றும் Barnaby Webber (19) ஆகியோரைக் கத்தியால் குத்திக் கொன்றார்.
Photograph: Ioannis Alexopoulos/LNP
அதைத் தொடர்ந்து Ian Coates (65) என்பவரைக் கொலை செய்த அந்த நபர், அவரது வேனை திருடிச் சென்று பாதசாரிகள் மீது மோதினார்.
இப்படி ஒன்றரை மணி நேரமாக அப்பகுதியில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது.
கொலை செய்த நபர் குறித்த அதிர்ச்சியை உருவாக்கும் செய்தி
இந்நிலையில், இந்த களேபரத்துக்குக் காரணமான நபர், நாட்டிங்ஹாம் பல்கலையின், அதாவது தற்போது கொல்லப்பட்ட மாணவர்கள் படித்த அதே பல்கலையில் படித்தவர் என்னும் அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Photograph: Ioannis Alexopoulos/LNP
அவரது பெயர் Valdo Amissão Mendes Calocane (31). மேற்கு ஆப்பிரிக்க நாடான Guinea-Bissau நாட்டில் பிறந்த அவர் குழந்தையாக இருக்கும்போதே நாட்டிங்ஹாமில் குடியமர்ந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், தங்கள் மாணவர்களைக் கொலை செய்த குற்றவாளி, தங்கள் பல்கலையின் முன்னாள் மாணவர் என்பது தெரியவந்துள்ளதையடுத்து பல்கலை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
Photograph: Tim Goode/PA
ஆனால், அவர் நாட்டிங்ஹாம் பல்கலை மாணவர் என்பதற்கும், அதே பல்கலை மாணவர்கள் கொல்லப்பட்டதற்கும் சம்பந்தம் இருக்கும் என்றோ, கொலைகளுக்கு அது காரணமாக இருக்கும் என்றோ தாங்கள் கருதவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |