பிரான்சில் மாட்டிறைச்சிக்கு தடை: பாக்டீரியா தொற்று காரணமாக அரசு அதிரடி
பிரான்சில் பல்பொருள் அங்காடிகளில் இறைச்சித் தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிகளுக்கு தடை
ஈ-கோலை(E.coli) பாக்டீரியா தொற்று பரவும் அச்சம் காரணமாக பிரான்ஸ் முழுவதும் விற்பனை செய்யப்படும் சில மாட்டிறைச்சி(Beef) தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொற்றுப் பரவல் காரணமாக பிரான்சில் உள்ள அனைத்து பல்பொருள் அங்காடிகளிலும் விற்பனை செய்யப்பட்ட மாட்டிறைச்சி தயாரிப்புகளை திரும்ப பெறுமாறு அந்த நாட்டின் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த புதிய தடையின் கீழ் மார்ச் 17ம் திகதி முதல் மார்ச் 26 வரை விற்பனை செய்யப்பட்ட 6 இறைச்சி தயாரிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

St Clemens Le Boucher, Etal du boucher, U, Sicarev மற்றும் Tradival பிராண்டு தயாரிப்புகள் இந்த தடையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
நுகர்வோர்களுக்கான அறிவுரை
பாதிக்கப்பட்ட இறைச்சி பிராண்டுகளை வாங்கி இருந்தால், அந்த இறைச்சியை வாங்கிய கடையிலேயே திருப்பி கொடுத்து அதற்கான பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
கடைகளை பொறுத்து ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 10 திகதிக்குள் இறைச்சிகளை திரும்ப அளிக்க வேண்டும்.
இறைச்சிகளை திரும்ப செலுத்த இயலாவிட்டால், அதை சமைக்கவோ அல்லது உண்ணவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |