பீட்ரூட் ஒன்னு போதும் முகத்தை வெள்ளையாக மாற்ற.. இப்படி பயன்படுத்தி பாருங்க
பெண்கள் எப்பொழுதும் முகத்தை பொலிவாக வச்சிக்க தான் விரும்புவார்கள். அந்தவகையில் பீட்ரூட் முகத்தை இயற்கையாகவே ஜொலிக்க வைக்கும்.
பக்கவிளைவே இல்லாத சரும பொலிவுக்கு ஒரு எளிய வழி பீட்ரூட் . இது இயற்கையாக சருமத்தை பிரகாசிக்கும் தன்மை கொண்டுள்ளது.
இந்த பீட்ரூட்டை கொண்டு 5 வகையான பேஸ்பேக் தயாரித்து முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் முகம் வெள்ளையாகவும், பொலிவாகவும் இருக்கும்.
1.பீட்ரூட் மற்றும் தயிர்
1 கப் நறுக்கிய பீட்ரூட்டை சாறாக்கி , 2 தேக்கரண்டி தயிருடன் கலந்து முகத்திலும் ,கழுத்திலும் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இதில் ப்ளீச்சிங் தன்மை உள்ளதால் முகம் பொலிவடைந்து காணப்படும்.
2. பீட்ரூட் மற்றும் எலுமிச்சை
1 சிறிய துண்டு பீட்ரூட்டை சாறாக்கி ,1 தேக்கரண்டி எலுமிச்சை சாற்றுடன் கலந்து முகத்திலும் ,கழுத்திலும் தடவி சுமார் 15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி உலர வைக்கவும்.
எலுமிச்சை பழுப்பு மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க உதவுகின்றன. அதுமட்டுமல்லாது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.
3. பீட்ரூட் மற்றும் தேன்
1 சிறிய துண்டு பீட்ரூட்டை சாறாக்கி , 1 தேக்கரண்டி தேனுடன் கலந்து முகத்திலும் , கழுத்திலும் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
தேனில் ஈரப்பதத்தன்மை உள்ளதால் சருமத்தை மென்மையாக காட்டுகிறது. மேலும் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் எதிர்த்து போராட பீட்ரூட் உதவுகிறது.
4. பீட்ரூட் மற்றும் மஞ்சள்
அரை தேக்கரண்டி மஞ்சளுடன், 1 சிறிய பீட்ரூட்டை சாறாக்கி கலந்து முகத்தில் பயன்படுத்தி வரலாம்.
அழற்சி எதிர்ப்புக்கொண்ட மஞ்சளும், பீட்ரூட்டின் இயற்கையான ஆண்டி ஆக்ஸிடன்ட்களும் சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
5.பீட்ரூட் மற்றும் கற்றாழை
1 சிறிய பீட்ரூட்டை சாறாக்கி 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லுடன் கலந்து முகத்தில் பயன்படுத்தி வந்தால் பளபளப்பான் சருமத்தை மேம்படுத்த உதவுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |