ரிலையன்சுக்கு முன்னர்... முகேஷ் அம்பானி நிறுவனத்தின் பெயர் இது தான்: வெளிவராத தகவல்
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் தற்போதைய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் முந்தைய பெயர் என்ன என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அந்த பெயரின் பின்னணி
ரிலையன்ஸ் நிறுவனம் முகேஷ் அம்பானியின் தந்தையன திருபாய் அம்பானியால் 1958 இல் நிறுவப்பட்டது. ஆனால் சிலருக்கு மட்டுமே ரிலையன்ஸ் என்ற அந்த பெயரின் பின்னணி தெரியும் என்றே கூறுகின்றனர்.
திருபாய் அம்பானி தனது நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் என்று பெயரிட காரணம், சுதந்திரம் மற்றும் தன்னம்பிக்கை மீதான அவரது வலுவான நம்பிக்கை என்றே கூறப்படுகிறது.
திருபாய் அம்பானி மற்றும் அவரது உறவினர் சம்பக்லால் தமானி ஆகிய இருவரும் இணைந்தே தொழில் தொடங்கும் முடிவுடன் களமிறங்கியுள்ளனர். யேமன் நாட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்த காலகட்டத்தில் யேமனுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார சாத்தியங்களை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.
சவால்களை சந்தித்த திருபாய்
இதனையடுத்து 1950களில் Majin என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ள இந்த இருவரும் மசாலா மற்றும் பாலியஸ்டர் நூலை யேமனுக்குள் இறக்குமதி செய்துள்ளனர்.
பின்னாளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸாக மாறிய வணிக சாம்ராஜியத்தின் அடித்தளமாகவும் Majin நிறுவனம் மாறியது. 1960 காலகட்டத்தில் இந்தியாவுக்கு திரும்பிய இந்த இருவரும் பின்னர் ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை நிறுவியுள்ளனர்.
1965ல் இந்த கூட்டணி பிரிய, அதன் பின்னரும் பல்வேறு சவால்களை சந்தித்த திருபாய் படிப்படியாக வளர்ச்சி கண்டார். அதன் பின்னரே தமது நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என பெயர் சூட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |