இதை நிறுத்திவிடுங்கள்... நோட்டோவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை
தங்கள் நாடு உலகிற்கு அச்சுறுத்துலாக இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ள பிம்பத்தை மிகைப்படுத்துவதை நிறுத்திவிடுங்கள் என நோட்டோவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
திங்களன்று பிரஸ்ஸல்ஸில் நோட்டோ நாடுகளின மாநாடு நடைபெற்றது.
மாநாட்டிற்கு பிறகு, சீனா அதன் சர்வதேச கடமைகளுக்கு ஏற்ப செயல்படுமாறு நோட்டோ தலைவர் வலியுறுத்தினர்.
சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு பெரிய சவால்களை ஏற்படுத்தக்கூடும், அதை இராணுவ கூட்டுப்படை மூலம் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று நோட்டோ தலைவர்கள் கூறினர்.
ரஷ்யா, சீனா மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களுக்களை எதிர்கொள்ள ஒரு புதிய திறன் வாய்ந்த திட்டத்தை உருவாக்க பிரஸ்ஸல்ஸில் நடந்த மாநாட்டின் போது நேட்டோ தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
நோட்டோ தலைவர்கள் அறிக்கையை அடுத்து, சீனா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புனையப்பட்ட கோட்பாட்டை மிகைப்படுத்துவதை நோட்டோ நிறுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சீனா பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.