ரஷ்யாவை தொட்டால் இது தான் கதி! உக்ரைனுக்கு பிரபல ஐரோப்பிய நாடு கடும் எச்சரிக்கை
உக்ரைன் டான்பாஸுக்கு எதிராகப் போரைத் தொடங்கினால், ரஷ்யாவுடன் இணைந்து தனது நாடு பதிலடி கொடுக்கும் என்று ஐரோப்பிய நாடான பெலாரஷ்ய அதிபர் Alexander Lukashenko தெரிவித்துள்ளார்.
கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய ஆதரவுப் படைகளுக்கும் உக்ரைனிய படைகளுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக மோதல் இடம்பெற்று வருகிறது.
தற்போது, உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா அதன் படைகளை குவித்துள்ளதால், டான்பாஸில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், டான்பாஸுக்கு எதிராகப் போரைத் தொடங்கினால், ரஷ்யாவுடன் இணைந்து தனது நாடு பதிலடி கொடுக்கும் என்று ஐரோப்பிய நாடான பெலாரஷ்ய அதிபர் Alexander Lukashenko தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் நடத்தை ரஷ்யாவுடன் போருக்கு வழிவகுத்தால் பெலாரஸ் எரிபொருள் அல்லது மின்சாரத்தை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யாது.
இரண்டு நட்பு நாடுகளும் சிவப்புக் கோடுகளை வரைந்துள்ளன என்றும், உக்ரைன் அதைத் தாண்டினால் ராக்கெட் தாக்குதல் உட்பட கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
அமெரிக்கா தான் உக்ரைனை போரில் இழுத்து விடுகிறது என Lukashenko குற்றம்சாட்டியுள்ளார்.