போர் தயார்நிலையை சோதிக்கும் முயற்சியில் பெலாரஸ் ராணுவ பயிற்சி!
உக்ரைனின் வடக்கே உள்ள அண்டை நாடான பெலாரஸ் பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை நடத்தத் தொடங்கியுள்ளது.
தங்கள் போர் தயார்நிலையை சோதிக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பெலாரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெலாரஸ் பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை நடத்துவது உக்ரேனிய தரப்புக்கு கவலையாக இருக்கலாம்.
இருப்பினும், இந்த பயிற்சி அண்டை நாடுகளுக்கு எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துருப்புகளை குவிக்கிறது ரஷ்யா! பிரித்தானியா முக்கிய தகவல்
உக்ரைனின் வடபகுதியைத் தாக்கும் தொடர்ச்சியான ஏவுகணைகள் பெலாரஷ்ய எல்லைக்கு அப்பால் இருந்து வந்ததாக சமீபத்திய வாரங்களில் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, உக்ரைனில் கொள்ளையடித்த பொருட்களை பெலாரஸில் சந்தை அமைத்து ரஷ்ய ராணுவம் விற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.