உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுடன் இணைய பிரபல ஐரோப்பிய நாடு தயாராகி வருகிறது! அமெரிக்கா பரபரப்பு தகவல்
உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுடன், அதன் ஐரோப்பிய நட்பு நாடான பெலாரஸ் இணைய தயாராகி வருவதாக பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
பெலாரஸ் விரைவில் ரஷ்ய படையெடுப்பிற்கு ஆதரவாக உக்ரைனுக்கு வீரர்களை அனுப்ப தயாராகி வருகிறது என அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், பெலாரஸ் ரஷ்யாவின் ஒரு அங்கம் என்பது மிகவும் தௌிவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா உடனான பேச்சுவார்த்தையை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்தார், ஆனால் எப்போது போர்வார்த்தை நடக்கும் என்பது குறித்த தகவலை அவர் வெளியிடவில்லை.
இந்நிலையில், இன்று இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு உக்ரைன்-ரஷ்யா பிரநிதிகளிடையே பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெலாரஸ் உடனான உக்ரைன் எல்லையில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், பெலராஸின் நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிகாரி வெளியிட்டுள்ள தகவல் பதட்டத்தை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.