புடினை சந்தித்த பிறகு அவசரமாக மருத்துவமனைக்கு சென்ற பெலாரஸ் ஜனாதிபதி
புடினுடனான சந்திப்புக்குப் பிறகு லுகாஷென்கோ மாஸ்கோவின் மத்திய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மருத்துவமனையில் பெலாரஸ் ஜனாதிபதி
பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ அவசரமாக மாஸ்கோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்த பின்னர் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக பெலாரஸ் எதிர்க்கட்சித் தலைவர் வலேரி செப்கலோ கூறியுள்ளார்.
Reuters
பெலாரஸ் ஜனாதிபதி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவர் தற்போது முன்னணி மருத்துவ நிபுணர்களின் கவனிப்பில் இருப்பதாகவும், இரத்த சுத்திகரிப்பு நடைமுறைகள் நடத்தப்பட்டதாகவும், மேலும் அவர் அசைவின்றி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புடினால் லுகாஷென்கோ உயிருக்கு ஆபத்தா? பரவும் வதந்திகள்
சில காலமாக லுகாஷென்கோவின் உடல்நிலை குறித்த வதந்திகள் சுற்றி வருகின்றன.
முன்னதாக மே 9 அன்று, மாஸ்கோவில் நடந்த வெற்றி தின அணிவகுப்புக்குப் பிறகு, லுகாஷென்கோ ரஷ்யாவை விட்டு வெளியேறினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் மதிய உணவை அவர் புறக்கணித்ததார் என தெரிவிக்கப்பட்டது.
Kremlin.ru
அவரது ரஷ்ய பயணத்தின் போது, லுகாஷென்கோ சோர்வாக காணப்பட்டதாகவும், அவரது வலது கை கட்டுக்குள் இருந்ததாகவும் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், இதுபோன்ற வதந்திகளுக்கு மத்தியில், கிரெம்ளின் லுகாஷென்கோவிற்கு விஷம் கொடுத்திருக்கக்கூடும் என ஊகங்கள் வெளிப்படும் என்பதாலே, அவரை காப்பாற்றுவதற்கான திட்டமிடப்பட்ட முயற்சிகளை ரஷ்யா செய்வதாக, பெலாரஸின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும் அமெரிக்காவுக்கான முன்னாள் தூதருமான வலேரி செப்கலோ கூறினார்.