விளாடிமிர் புடினை ரஷ்யாவில் சந்திக்கும் நாடொன்றின் ஜனாதிபதி
Belarus president meet putin on saturday in russia: பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ ரஷ்யாவின் தலைவர் விளாடிமிர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த வார இறுதியில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் ஜனாதிபதிகள் விளாடிமிர் புடினும், அலெக்ஸாண்டர் லுகாஷென்கோவும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு விடயங்கள் குறித்து
பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ வியாழக்கிழமையன்று ரஷ்யா வந்தடைந்தார்.
அவரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் (Vladimir Putin) இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியப் பகுதிகள், அழுத்தமான பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள், பாதுகாப்பு விடயங்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ், தலைவர்களின் பேச்சுவார்த்தைகள் சனிக்கிழமை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளன.
ரஷ்ய-பெலாரஸ் வர்த்தகம்
மேலும், பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுடன் ரஷ்ய-பெலாரஸ் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் லுகாஷென்கோ விவாதிக்க உள்ளார்.
அலெக்ஸாண்டர் லுகாஷென்கோவின் ஆட்சி பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கிரெம்ளினை பெருமளவில் சார்ந்தே உள்ளது.
அத்துடன் ரஷ்யாவின் தந்திரோபாய அணு ஆயுதங்களில் ஒரு பகுதியை பெலாரஸ் தற்போது தனது மண்ணில் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |