பேரழிவை சந்திப்பீர்கள்... அண்டை நாடுகளுக்கு பிரபல ஐரோப்பிய நாடு கடும் எச்சரிக்கை
ஐரோப்பிய நாடும், ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் தனது அண்டை நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கிய போது, பெலாரஸிலிருந்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்துவதாக உக்ரேனிய அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து, ரஷ்ய படைகளுக்கு பெலாரஸில் இடமளிக்கக்கூடாது என மேறகத்திய நாடுகள் எச்சரிக்கை விடுத்தன. எனினும், ரஷ்ய-உக்ரைன் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை பெலாரஸில் இடம்பெற்றது.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 54வது நாளாக போர் தொடுத்து வருவதற்கு மத்தியில், உக்ரைனை தொடர்ந்து ரஷ்ய தங்களை குறிவைக்கக்கூடும் என்ற அச்சத்தில் அண்டை நாடுகளான போலந்து, லிதுவேனியா மற்றும் லாட்வியா தங்களுடைய ராணுவ பலத்தை அதிகரித்துள்ளன.
ராணுவ பலத்தை அதிகரித்துள்ள போலந்து, லிதுவேனியா மற்றும் லாட்வியா ஆகிய அண்டை நாடுகளுக்கு பெலாரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது, இந்த நாடுகள் பெலாரஸ் மீது தாக்குதல் நடத்தினால் பேரழிவு, மரணங்கள் மற்றும் குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்படும் என பெலாரஸ்ய மூத்த அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளான போலந்து, லிதுவேனியா மற்றும் லாட்வியா ஆகியதை நேட்டோ உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.