ரஷ்ய அதன் அணு ஆயுதங்களை தங்கள் நாட்டிற்குள் நிலைநிறுத்த அனுமதிக்கலாமா? வாக்கெடுப்பு நடத்தும் பிரபல ஐரோப்பிய நாடு
ரஷ்ய அணு ஆயுதங்களை தங்கள் நாட்டிற்குள் நிலைநிறுத்த அனுமதிப்பது தொடர்பில் பிரபல ஐரோப்பிய நாடான பெலாரஸ் இன்று வாக்கெடுப்பு நடத்தயிருக்கிறது.
உக்ரைன் மீது தொடர்ந்து 4வது நாளாக தாக்குதல் நடத்திய வரும் ரஷ்யா, ஐரோப்பியாவில் உள்ள அதன் நட்பு நாடான பெலாரஸிலிருந்தும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
தங்கள் நிலப்பரப்பில் ரஷ்யா அணு ஆயுதங்களை நிலைநிறுத்த அனுமதிக்கும் அரசியலமைப்பு திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பு, பெலாரஸ் நாட்டில் இன்று பிப்பரவி 27ம் திகதி நடத்தப்படவிருக்கிறது.
பெலாரஸிலிருந்த படி ரஷ்ய படைகள் உக்ரைனை வடக்கிலிருந்து தாக்கி வரும் நிலையில், இந்த வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முன் பெலாரஸ் நாட்டில் ரஷ்யா-பெலாரஸ் படைகள் கூட்டு இராணுவ பயிற்சியை மேற்கொண்டனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.