உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுடன் இணைவது குறித்து தனது நிலைப்பாட்டை அறிவித்தது பெலாரஸ்!
உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுடன் இணைவது குறித்து பெலாரஸ் அதிபர் Lukashenko தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து 9வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், Energodar நகரை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், ரஷ்யாவின் நட்பு நாடாக திகழ்ந்து வரும் பெலாரஸ், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையில் பங்கேற்காது என அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் பெலாரஸ் அதிபர் Lukashenko கூறியதாவது, உக்ரைன் மீதான ரஷ்யா போரில் பெலாரஸ் ஆயுத படைகள் பங்கேற்கவில்லை, பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியதாக Lukashenko கூறினார்.
உக்ரைன் மீது பல திசைகளிலிருந்து படையெடுத்து ரஷ்யா, பெலாரஸ் பிராந்தியத்திலிருந்தும் உக்ரைன் மீது படையெடுத்தது குறிப்பிடத்தக்கது.