பெற்ற தாயை துண்டு துண்டாக வெட்டி, பிரிட்ஜில் வைத்து கால்வாயில் வீசிய கொடூரன்!
பெல்ஜியத்தில் தனது தாயை கொலை செய்து, அவரது உடல் பாகங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கால்வாயில் வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.
துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல்
பெல்ஜியத்தின் Liege நகரில் உள்ள கால்வாயில் குளிர்சாதனப் பெட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனுள் மனித உடல்பாகங்கள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதில் பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்து 70 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் என அடையாளம் காணப்பட்டது.
இதனையடுத்து துப்பறியும் நிபுணர்கள் எஞ்சிய உடல்பாகங்களை அருகில் உள்ள ஆற்றில் கண்டுபிடித்தனர்.
Representative image
கொலையாளி மகன்
தீவிர விசாரணையில் இறங்கிய பொலிஸார், பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹொட்டல் ஒன்றில் வைத்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகனை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பெற்ற தாயை கொலை செய்து இவ்வாறு செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
மேலும் தென் கொரியாவுக்கு செல்ல அவர் தயாராகி இருந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |