கைகள் கட்டப்பட்டு சாலையில் வீசப்பட்ட பெல்ஜியம் நாட்டு இளம்பெண்: சுதந்திர தினத்தன்று நேர்ந்த பயங்கரம்!
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாகிஸ்தானில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி சித்திரவதை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தரவதைக்கு உள்ளான இளம்பெண்
பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14ம் திகதி, பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த 28 வயது இளம் பெண் ஒருவர் இஸ்லாமாபாத் நகர சாலையில் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர்வாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பெண்ணை பத்திரமாக மீட்டனர்.
இது தொடர்பாக பொலிஸார் வழங்கிய தகவலில், பாதிக்கப்பட்ட பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பெண் 5 நாட்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் சாலையில் வீசி எறியப்பட்டுள்ளார்.
குற்றவாளிகளில் ஒருவர் கைது
பாதிக்கப்பட்டவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர் சில ஆண்களால் 5 நாட்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி இருப்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், தமீசுதீன் (Tameezuddin) என்று அடையாளம் காணப்பட்டுள்ள நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |