32.4 மில்லியன் யூரோ மதிப்புள்ள வெடிமருந்துகள்: உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்க முன்வந்துள்ள நாடு
உக்ரைனுக்கான புதிய இராணுவ உதவி தொகுப்பை வழங்க பெல்ஜிய அமைச்சர்கள் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
உக்ரைனின் பதிலடி தாக்குதல்
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உக்ரைனுக்கான புதிய ஆயுத உதவி தொகுப்பினை அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சமீபத்தில் கவர்ந்து வந்தார்.
இதையடுத்து ரஷ்யாவின் அத்துமீறிய போர் நடவடிக்கைகளுக்கு பதிலடி வழங்கும் விதமான எதிர்ப்பு தாக்குதலுக்கு உக்ரைன் தயாராகி விட்டதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சூளுரைத்தார்.
So Ukraine advertised the counter offensive in an ad that depicts soldiers armed with NATO equipment breaking the Russian lines.
— Richard (@ricwe123) June 9, 2023
Meanwhile in reality, during that same counter offensive, Ukrainian Leopards are slowly but surely being demolished by the Russian army....
???? pic.twitter.com/11M3LFsSxR
மேலும் உக்ரைனின் வெளியுறவு அமைச்சர், பதிலடி தாக்குதலுக்கான அனைத்து ஆயுதங்களும் தயாராக இருப்பதாகவும், இந்த திட்டத்தின் வெற்றியே நோட்டோவில் இணையும் உக்ரைனின் விருப்பத்திற்கு மிகப்பெரிய திறவுகோலாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.
புதிய ஆயுத உதவி
ஏற்கனவே அமெரிக்கா, ஜேர்மனி, பிரித்தானியா, ஆகிய நாடுகளுக்கு உக்ரைனுக்கு அடுத்தக்கட்ட ஆயுத உதவியை வழங்க முன்வந்து இருக்கும் நிலையில், உக்ரைனுக்கு 14வது புதிய ஆயுத உதவி தொகுப்பினை வழங்க பெல்ஜிய அமைச்சர்கள் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
The #Belgian Council of Ministers approved the 14th package of military assistance to #Ukraine, under which Kyiv will receive 105mm ammunition worth 32.4 million euros. pic.twitter.com/mBTiQNV9Ym
— NEXTA (@nexta_tv) June 9, 2023
இதனடிப்படையில் உக்ரைனுக்கு 32.4 மில்லியன் யூரோ மதிப்பிலான 105mm வெடிமருந்துகளை பெல்ஜியம் அரசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.