திருவிழா ஒத்திகைக்குள் நுழைந்த கார்: 4பேர் பரிதமாக உயிரிழப்பு
மேற்கு ஐரோப்பாவின் பெல்ஜியம் நாட்டில் திருவிழா அணிவகுப்பிற்க்கு தயாராகி கொண்டிருந்த பொதுமக்கள் கூட்டத்தில் திடிரென வேகமாக நுழைந்த காரினால் குறைந்தது 4 நபர்கள் வரை உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் ப்ரஸ்ஸஸ்(brussels) இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய நகரான ஸ்ட்ரெபி-ப்ராக்வெக்னிஸ்-ல் ( Strépy-Bracquegnies) திருவிழா அணிவகுப்பிற்காக தயாராகி கொண்டிருந்த பொதுமக்கள் கூட்டத்தில் எதிர்பாராத விதமாக திடிரென கார் ஒன்று நுழைந்து பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கார் விபத்தில் இதுவரை 4 நபர்கள் வரை உயிரிழந்து உள்ளனர் எனவும், 12 மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாகவும் அந்த பகுதியின் மேயர் ஜாக் கோபர்ட் வானொலி நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளிவராத நிலையில், பொலிஸாரின் துரத்துதல் நடவடிக்கையால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என உள்ளுர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய அந்த கார் மற்றும் அதன் ஓட்டுநரை பொலிசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ள நபர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அந்த நாட்டின் உள்விவகாரத்து துறை அமைச்சர் அன்னெலிஸ் வெர்லிண்டன் ட்விட்டர் வாயிலாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் இராணுவ வெடிமருந்து சேமிப்பகத்தில் பயங்கர விபத்து