பாகிஸ்தான் இராணுவ வெடிமருந்து சேமிப்பகத்தில் பயங்கர விபத்து
பாகிஸ்தானில் சியால்கோட் நகரத்தில் உள்ள அமைந்துள்ள இராணுவ வெடிமருந்து சேமிப்பகத்தில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கண்டோன்மென்ட் பகுதிக்கு அருகே குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. பலர் இந்த சம்பவத்தின் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர், பலர் அந்த பகுதியில் பல முறை குண்டுவெடிப்புகள் நடந்ததாகக் கூறியுள்ளனர்.
வீடியோக்களில், இராணுவ தளத்தில் இருந்து அடர்த்தியான சாம்பல் மற்றும் கருப்பு புகை எழுவதைக் காணலாம்.
சியால்கோட் கன்டோன்மென்ட், பாக்கிஸ்தானின் மிகப் பழமையான மற்றும் மிக முக்கியமான இராணுவத் தளங்களில் ஒன்றாகும், இது நகரத்திற்கு அருகில் உள்ளது. இது 1852-ல் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தால் நிறுவப்பட்டது.
Reportedly Ammunition depot of Pakistan Army, Sialkot hit by "unidentified object". Huge fire and ongoing blasts...
— MUBreaking (@MUBreaking) March 20, 2022
Massive explosion occurred at Pakistan Army Depot in Bhalan Wala, #Sialkot.
No Official Reason given. Ammo Depot is close to Jammu pic.twitter.com/4dgktLNIvb
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது தனது அரசாங்கத்தை காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) அரசாங்கம், நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் சுழல் பணவீக்கத்திற்கு காரணமாக இருந்தது என்று குற்றம் சாட்டி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 100 சட்டமன்ற உறுப்பினர்கள், மார்ச் 8 அன்று தேசிய சட்டமன்ற செயலகத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்தனர்.
Something is Happening in #Sialkot
— MariA RazAa (@RazaaMaria) March 20, 2022
Cant #Sialkot pic.twitter.com/UsZ97NhW7M