2026 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் வென்ற பெல்ஜியம் விஞ்ஞானி
belgium Francis Halzen awarded nobel in physics: 2026 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு வென்ற பெல்ஜியத்தை சேர்ந்த பிரான்சிஸ் ஹால்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2026 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

2026 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.
நேற்று மருத்துவத்திற்கான நோபல் விருதுக்கு, கார்ல் டைசெரோத் (Karl Deisseroth), பீட்டர் ஹெகேமன் (Peter Hegemann) மற்றும் ஜார்ஜ் நாகல் (Georg Nagel) ஆகிய 3 விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
பிரான்சிஸ் ஹால்சன்
இன்று 2026 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு பிரான்சிஸ் ஹால்சன்(Francis Halzen) என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்க்யூப் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு ஆற்றிய தீர்க்கமான பங்களிப்புகள் மற்றும் வானியல் தோற்றம் கொண்ட உயர் ஆற்றல் நியூட்ரினோக்களைக் கண்டுபிடித்ததற்காக பிரான்சிஸ் ஹால்சன் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நோபல் தேர்வு குழு தெரிவித்துள்ளது.
BREAKING NEWS The Royal Swedish Academy of Sciences has decided to award the 2026 #NobelPrize in Physics to Francis Halzen “for decisive contributions to the IceCube Neutrino Observatory and the discovery of high-energy neutrinos of astrophysical origin.” https://t.co/UcPBWk0RiK
— The Nobel Prize (@NobelPrize) October 6, 2026
பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 86 வயதான பிரான்சிஸ் ஹால்சன், அண்டார்டிகாவில் உள்ள அமுண்ட்சென்-ஸ்காட் தென் துருவ நிலையத்தில் உள்ள ஐஸ்க்யூப் நியூட்ரினோ ஆய்வகத்தின் முதன்மை ஆய்வாளர் ஆவார்.
இது 2010 முதல் செயல்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய நியூட்ரினோ கண்டறியும் கருவியாகும்.