நடுவானில் கத்தியை காட்டி விமான கடத்த முயன்ற நபர்: அமெரிக்க பயணியால் வான்வழி திகில்!
அமெரிக்க குடிமகன் ஒருவர் நடுவானில் விமானத்தை கடத்த முயன்ற சம்பவம் மற்ற பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பெலிஸ் விமானக் கடத்தல் முயற்சி
நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட பரபரப்பான செய்தி குறிப்பின்படி, வியாழக்கிழமை பெலிஸில்(Belize) உள்ள சான் பெட்ரோவுக்குச்(San Pedro) சென்ற ட்ராபிக் ஏர்(Tropic Air ) நிறுவனத்தின் சிறிய விமானத்தை நடுவானில் கடத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகின்யேலா சவா டெய்லர்(Akinyela Sawa Taylor) என்ற 49 வயது அமெரிக்க குடிமகன், கத்தியை காட்டி பயணிகளை மிரட்டி விமானத்தைக் கடத்த முயன்றதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பயங்கரமான வன்முறைச் சம்பவத்தில் மூன்று பயணிகள் படுகாயமடைந்தனர்.
துணிச்சல்மிக்க பயணியின் வீர செயல்
எனினும், துணிச்சல்மிக்க மற்றொரு பயணி உடனடியாகவும் சமயோசிதமாகவும் செயல்பட்டு, டெய்லரை சுட்டு கொன்றார்.
அவரது இந்த வீரச்செயலை பெலிஸ் காவல்துறை ஆணையர் செஸ்டர் வில்லியம்ஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
தாக்குதல் நடத்திய நபர் அமெரிக்காவைச் சேர்ந்த அகின்யேலா சவா டெய்லர் என்பதை ஆணையர் வில்லியம்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வில், டெய்லர் எப்படி விமான நிலையத்தின் பாதுகாப்பு வளையத்தை மீறி கத்தியை விமானத்திற்குள் கொண்டு வந்தார் என்பது தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் குறித்து மேலும் புலன் விசாரணை மேற்கொள்வதற்காக, பெலிஸ் அதிகாரிகள் அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளையும் ஒத்துழைப்பையும் கோரியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |