உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் கருப்பு கவுனி அரிசி கஞ்சி : ஈசியா எப்படி செய்யலாம்?

Onion Weight Loss
By Kirthiga Jan 13, 2024 05:13 AM GMT
Report

பொதுவாகவே பெண்கள் தங்களது உடலை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த காலக்கட்டத்தில் இளம் வயதினர் தான் அதிகமாக உடல் எடை அதிகரிப்பை எதிர்கொள்கின்றனர்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்க பல வழிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் அதில் முழுமையான பலன் கிடைப்பதில்லை.

ஆகவே உடலின் தொப்பை மற்றும் இடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்க, இந்த ஆரோக்கியமான கருப்பு கவுனி அரிசி கஞ்சியை செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்

  • கருப்பு கவுனி அரிசி - 200 கிராம்

  • பாசி பருப்பு - 4 ஸ்பூன்

  • சின்ன வெங்காயம் - 1/2 கைப்புடி

வறட்டு இருமலை விரட்டியடிக்கும் வீட்டு வைத்தியம்

வறட்டு இருமலை விரட்டியடிக்கும் வீட்டு வைத்தியம்

  • தக்காளி - 1

  • கேரட் - 1

  • பூண்டு - 3 பல்

  • தண்ணீர் - 6 கப்

  • பச்சை மிளகாய் - 2

  • தேங்காய் பால் - 300ML

  • தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

  • வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

  • சீரகம் - 1/2 டீஸ்பூன்

  • கொத்தமல்லி இலை

  • புதினா இலை

  • உப்பு - தேவையான அளவு 

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் கருப்பு கவுனி அரிசி கஞ்சி : ஈசியா எப்படி செய்யலாம்? | Belly Fat Reduce Kavuni Rice Kanji Recipe Tamil

செய்முறை

  • முதலில் கருப்பு கவுனி அரிசியை 8 மணி நேரத்திற்கு ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும். 

  • பின் ஊறவைத்த கருப்பு கவுனி அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி தண்ணீரை வேறாக வைத்துக்கொள்ளவும்.

  • அடுத்து மிக்ஸியில் கவுனி அரிசி மற்றும் பாசி பருப்பையும் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

  • ஒரு குக்கரில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, வெந்தயம், சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து கிளறிக் கொள்ளவும்.

  • பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து கிளறிக்கொண்டு, கேரடையும் சேர்த்து வதக்கவும்.

தங்கம் போல் ஜொலிக்கும் சருமத்தை பெற வெள்ளரிக்காய்; எப்படி பயன்படுத்தலாம்?

தங்கம் போல் ஜொலிக்கும் சருமத்தை பெற வெள்ளரிக்காய்; எப்படி பயன்படுத்தலாம்?

  • அதில் கொத்தமல்லி, புதினா இலை, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

  • வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள கருப்பு கவுனி அரிசியை சேர்க்கவும்.

  • பிறகு ஊற வைத்து எடுத்த தண்ணீரை சேர்த்துக்கொள்ளவும்.

  • பிறகு இரண்டு பச்சை மிளகாயை அதில் உடைத்து போட்டு நன்கு கொதிக்க விடவும். 

  • அனைத்தையும் சேர்த்தவுடன் குக்கரை மூடிவிட்டு 4 முதல் 5 விசில் வரும்வரை மிதமான தீயில் வைக்கவும்.

  • பின் கஞ்சியை கட்டி இல்லாமல் நன்கு கிளறி விடவும். 

  • அடுத்து அதில் திக்கான தேங்காய் பால் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

  • இறுதியாக கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறி எடுத்தால், சூப்பரான கருப்பு கவுனி அரிசி கஞ்சி ரெடி!

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் கருப்பு கவுனி அரிசி கஞ்சி : ஈசியா எப்படி செய்யலாம்? | Belly Fat Reduce Kavuni Rice Kanji Recipe Tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US