ஓய்வு அறிவித்து, பின் களமிறங்கி சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அபார சாதனை படைத்தார்.
பென் ஸ்டோக்ஸ் மிரட்டல் சதம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 181 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 124 பந்துகளில் 182 ஓட்டங்கள் குவித்தார்.
இது அவருக்கு ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் எடுத்த அதிபட்ச ஸ்கோர் ஆகும்.
History-making ?
— England Cricket (@englandcricket) September 13, 2023
Record-breaking ?
Unreal @benstokes38 ? pic.twitter.com/WlEGKnENhW
சாதனை படைத்த ஸ்டோக்ஸ்
அதேபோல் ஒருநாள் போட்டியின் ஒரு இன்னிங்ஸ் அதிக ஸ்கோர் எடுத்த இங்கிலாந்து அணி வீரர் என்ற சாதனையை பென் ஸ்டோக்ஸ் படைத்தார்.
இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு ஜேசன் ராய் 180 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்த நிலையில், ஸ்டோக்ஸ் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஸ்டோக்ஸ், மீண்டும் களத்திற்கு வந்த சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Getty Images
இங்கிலாந்து வீரர்களின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்:
- பென் ஸ்டோக்ஸ் - 182
- ஜேசன் ராய் - 180
- அலெக்ஸ் ஹால்ஸ் - 171
- ராபின் ஸ்மித் - 167*
- ஜோஸ் பட்லர் - 162*
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |