9 சிக்ஸர்களுடன் 182 ஓட்டங்கள் விளாசல்! ருத்ர தாண்டவம் ஆடிய பென் ஸ்டோக்ஸ்..அதிர்ந்த மைதானம்
நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பென் ஸ்டோக்ஸின் சதத்தின் மூலம் 368 ஓட்டங்கள் இங்கிலாந்து குவித்தது.
சதத்தை தவறவிட்ட மலான்
லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது.
பேர்ஸ்டோவ் முதல் பந்திலேயே அவுட் ஆக, அடுத்து வந்த ரூட் 4 ஓட்டங்களில் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
Reaching 50 in style! ?
— England Cricket (@englandcricket) September 13, 2023
Scorecard/clips: https://t.co/Pd380O21mn@IGCom
| @benstokes38 pic.twitter.com/QKo94vqknl
பின்னர் மலான் மற்றும் ஸ்டோக்ஸ் ஜோடி இணைந்து அதகளம் செய்தது. ஒருபுறம் மலான் நிதானமாக ஆட, மறுபுறம் ஸ்டோக்ஸ் சிக்ஸர்களை தெறிக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.
சதத்தை நோக்கி சென்ற மலான் 96 (95) ஓட்டங்களில் போல்ட் பந்தில் லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
Twitter (@BLACKCAPS)
பென் ஸ்டோக்ஸ் ருத்ர தாண்டவம்
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பட்லர் அதிரடியாக 24 பந்துகளில் 38 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதற்கிடையில் பென் ஸ்டோக்ஸ் 76 பந்துகளில் சதம் விளாசினார்.
அதன் பின்னரும் ருத்ர தாண்டவம் ஆடிய அவர் 124 பந்துகளில் 182 ஓட்டங்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 9 சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடங்கும்.
Ridiculous.
— England Cricket (@englandcricket) September 13, 2023
Scorecard/clips: https://t.co/Pd380O21mn@IGCom | #EnglandCricket pic.twitter.com/6FGco9sV24
இங்கிலாந்து அணி 48.1 ஓவரில் 368 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளும், லிஸ்டர் 3 விக்கெட்டுகளும், பெர்குசன் மற்றும் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |