அவுஸ்திரேலியாவை அடித்து நொறுக்கி சதமடித்த மார்க்ரம்! தென் ஆப்பிரிக்க அணி இமாலய வெற்றி
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி காக் 82
தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது.
முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டி காக் மற்றும் பவுமா இருவரும் அதிரடியில் மிரட்டினர்.
QUINNY IS COOKING ?
— Proteas Men (@ProteasMenCSA) September 12, 2023
✅ Precision
✅ Power
✅ Flair
Another classic Quinton de Kock innings to reach a half-century ?
Go On Quinny ?#BePartOfIt #SAvAUS pic.twitter.com/oBUMVk8vLa
அவுஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்த இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 146 ஓட்டங்கள் குவித்தது.
டி காக் 82 (77) ஓட்டங்களில் அவுட் ஆனதைத் தொடர்ந்து, கேப்டன் பவுமாவும் 57 (62) ஓட்டங்களில் வெளியேறினார்.
மார்க்ரம் அதிரடி சதம்
பின்னர் வந்த ஹென்ரிக்ஸ் 39 ஓட்டங்களில் ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். ஆனால் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடிய மார்க்ரம், எதிரணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்.
சிக்ஸர் பவுண்டரிகள் என தெறிக்கவிட்ட அவர் 74 பந்துகளில் 102 ஓட்டங்கள் விளாசினார். இதில் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும். மறுமுனையில் அவருக்கு பக்கபலமாக ஆடிய ஜென்சென் 16 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தார்.
? END OF INNINGS
— Proteas Men (@ProteasMenCSA) September 12, 2023
?? Massive cheers at the JB Marks Oval as Aiden Markram gets a century??
Magnificent from Aiden ? What a way to end the innings
? Australia need 339 to win #BePartOfIt #SAvAus pic.twitter.com/qI4y0DCRp4
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 338 ஓட்டங்கள் குவித்தது. அவுஸ்திரேலிய அணியின் தரப்பில் ஹெட் 2 விக்கெட்டுகளும், ஸ்டோய்னிஸ், எல்லிஸ் மற்றும் சங்கா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணியில் ஹெட் 38 ஓட்டங்களும், மார்ஷ் 29 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடியில் மிரட்டிய டேவிட் வார்னர் 56 பந்துகளில் 78 ஓட்டங்கள் விளாசினார்.
Twitter (icc)
அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் கோட்ஸியே பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனால் அவுஸ்திரேலிய அணி 34.3 ஓவர்களில் 227 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியுற்றது.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கோட்ஸியே 4 விக்கெட்டுகளும், ஷாம்சி மற்றும் கேஷவ் மஹாராஜ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |