லாராவுக்கு மரியாதையை செலுத்த டிக்ளேரா? தென்னாப்பிரிக்க கேப்டனை கிண்டல் செய்த ஸ்டோக்ஸ்
தென்னாப்பிரிக்க அணித்தலைவர் வியான் முல்டர் டிக்ளேர் செய்த முடிவை, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கிண்டல் செய்துள்ளார்.
367 ஓட்டங்கள்
ஜிம்பாப்பே அணிக்கு எதிரான டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணித்தலைவர் வியான் முல்டர் 367 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தார்.
அவர் பிரையன் லாராவின் 400 ஓட்டங்கள் சாதனையை முறியடிப்பார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அவரது டிக்ளேர் முடிவு அதிர்ச்சி கொடுத்ததால் பல தரப்பட்ட விமர்சனங்களை முல்டர் எதிர்கொண்டார்.
எனினும் பிரையன் லாரா (Brian Lara) மீது உள்ள மரியாதை காரணமாக அந்த சாதனையை முறியடிக்க வேண்டாம் என நினைத்ததாக முல்டர் விளக்கம் அளித்தார்.
பென் ஸ்டோக்ஸ் கிண்டல்
இந்த நிலையில் இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) இதனை விமர்சித்து பேசியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய ஸ்டோக்ஸ், "ஒரு புதிய நாளில் உங்கள் கேப்டன் உங்களை வெளியேற்றுவதை விட அதை நீங்களே செய்ய விரும்புவீர்கள் என்று ஒரு அணித்தலைவராக நான் நினைக்கிறேன். ஆனால் அது அவருக்கு நியாயமான ஆட்டமாக இருக்கும்.
பிரையன் லாராவுடன் இந்த சாதனை நிலைத்திருப்பது பற்றி அவர் ஏதோ கூறினார் என்று நினைக்கிறேன். அவருக்கு மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை (சிரிக்கிறார்). ஆனால் இல்லை, அவருக்கு நியாயமாக அவர் விளையாட வேண்டும். அவர்கள் வெற்றியைப் பெற்றார்கள், அதுதான் பெரிய விடயம் என்பது தெளிவாகிறது" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |