சதம் விளாசி புதிய வரலாறு படைத்த பென் ஸ்டோக்ஸ்! முதல் இங்கிலாந்து வீரர் இவர்தான்
டெஸ்ட் வரலாற்றில் 200 விக்கெட்டுகளுடன் 7000 ஓட்டங்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ்
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) சதம் விளாசினார்.
𝑴𝒖𝒔𝒄𝒍𝒆𝒅. pic.twitter.com/j7QALylAH5
— England Cricket (@englandcricket) July 26, 2025
இது அவரது 14வது டெஸ்ட் சதம் ஆகும். இதன்மூலம் அவர் 7000 ஓட்டங்களையும் டெஸ்டில் கடந்துள்ளார். ஸ்டோக்ஸ் ஒரே டெஸ்டில் 5 விக்கெட் மற்றும் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
வரலாற்று சாதனை
மேலும், டெஸ்டில் 7000 ஓட்டங்கள் மற்றும் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் எனும் வரலாற்று சாதனையையும் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகளின் கேரி சோபர்ஸ் (8,032 ஓட்டங்கள் மற்றும் 235 விக்கெட்டுகள்), தென் ஆப்பிரிக்காவின் ஜேக் கல்லிஸ் (13,289 ஓட்டங்கள் மற்றும் 292 விக்கெட்டுகள்) ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்திருந்தனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் 198 பந்துகளில் 3 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 141 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |