பாகிஸ்தானை அச்சுறுத்த கேப்டனாக இணைந்த மிரட்டல் வீரர்! இங்கிலாந்து அணி அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விளையாட உள்ள இங்கிலாந்து அணியை பென் ஸ்டோக்ஸ் வழிநடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இங்கிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் மிரட்டலான ஆல்ரவுண்டர் வீரரான பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) அணிக்கு திரும்பியுள்ளார்.
அட்கின்ஸன், வோக்ஸ் வெளியேற்றம்
அத்துடன் அணித்தலைவராக செயல்பட்டு இங்கிலாந்து அணியை அவர் வழிநடத்த உள்ளார். ஸ்டோக்ஸின் வருகை பாகிஸ்தான் அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வேகப்பந்து வீச்சாளர்களான கஸ் அட்கின்ஸன் (Gus Atkinson), கிறிஸ் வோக்ஸ் (Chris Woakes) ஆகியோர் வெளியேறியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஸ்டோக்ஸுடன் வேகப்பந்து வீச்சாளர் மேட் போட்ஸ் இணைந்துள்ளார்.
அணி விபரம்
- ஸக் கிராவ்லே
- பென் டக்கெட்
- ஓலி போப்
- ஜோ ரூட்
- ஹாரி புரூக்
- பென் ஸ்டோக்ஸ் (அணித்தலைவர்)
- ஜேமி ஸ்மித்
- பிரிடோன் கார்ஸ்
- மேட் போட்ஸ்
- ஜேக் லீச்
- சோயிப் பஷீர்