இலங்கை ஜாம்பவான் ஜெயவர்த்தனே மீண்டும் மும்பை பயிற்சியாளராக நியமனம்
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கையின் மஹேல ஜெயவர்த்தனே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மார்க் பவுச்சர்
தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் மும்பை இந்தியன்ஸின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.
ஆனால், அவர் எடுத்த ஒரு முடிவு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பாதகமாக அமைந்தது. ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது தான் அணிக்கு பலத்த அடியாக விழுந்தது.
மீண்டும் ஜெயவர்த்தனே
இதுதொடர்பாக பவுச்சர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் மார்க் பவுச்சர் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்கு பதிலாக இலங்கை ஜாம்பவான் மஹேல ஜெயவர்த்தனே (Mahela Jayawardane) மீண்டும் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது தலைமையில் 2017, 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி கோப்பையைத் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |